செவ்வாய், 11 டிசம்பர், 2012

RTO - ஆன்லைன் சர்வீஸ்


RTO - ஆன்லைன் சர்வீஸ்


அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்   கொண்டிருந்த வட்டார போக்குவரத்து கழகத்தின் (RTO) ஆன் லைன் சர்வீஸ் 80% இன்று காலை முதல் செயல்ப்படும். மீதமுள்ள ஆன்லைன் சேவைகளூம் டிசம்பர் 3ஆம் தேதி முதல் செய்யபடும். ஒவ்வொரு RTO அலுவுலகத்திலும் இப்பொழுது என்ன நம்பர் சீர்யல் ஓடுகிறது TN - 13 - XX - XXXX ,

என்ன வி ஐ பி நம்பர் இருக்கிறது, லைசன்ஸ் ஆன்லைன் அப்ளிகேஷன், உங்களின் டிரைவிங் லைசன்ஸ் தற்போதைய நிலமை, ஒவ்வொரு வாகனத்திற்க்கும் ரோடு டாக்ஸ் ஆன்லைனில் செலுத்துதல், கன்டக்டர் உரிமம் புதுபித்தல்,
புது வாகன் ரிஜிஸ்ட்ரேஷன் அப்ளிகேஷன், ஒட்டுனர் உரிமம் ரோடு டெஸ்ட் ஆன்லைன் அப்பயின்ட்மென்ட்,  மற்றும் லோன் ஹைபோதிகேஷன் ஆர் சி புக்கில் இருந்து எடுக்க எந்த ஆர் டி ஓ ஆபிசுக்கு நீங்கள் செல்ல வேண்டும்  மற்றும் வண்டி ரிஜிஸ்ட்ரேஷன் டீட்டேயில்ஸ் எல்லாம் இனிமே நம் கையில், இனிமே புரொக்கர் வேண்டவே வேண்டாம்,

இந்த சேவை தான் நாம் எதிர்பார்த்த சேவை........... நாளை அல்லது நாளை
மறு நாள் செய்திகளில் வரலாம் ஆனால் நீங்கள் இன்றே கலக்குங்கள்.




1.ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு - Learners License Online Application -



2.தொடக்க வாகன பதிவு எண் - Today What Number Series in your RTO -



3.வாகன வரி விகிதங்கள் - Tax Rates Details - Vehicle Wise -



4.நிர்வாக எல்லை அறிய - Know your RTO by Postcode -



5. ஓட்டுனர் உரிமம் டிரைவிங் லைசன்ஸ் ஆன் லைன் அப்பயின்ட்மென்ட் - Online Appointment Booking for Road Test -



6.பொது நிர்வாக விசாரிப்புகள் - General Enquiries -

அரசு வேலைவாய்ப்பு! - இணையம் வழியாக பதிவு செய்வது எப்படி?

அரசு வேலைவாய்ப்பு! - இணையம் வழியாக பதிவு செய்வது எப்படி?




தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட 64 லட்சம் பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது. 

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும்.
இதற்காக வேலைவாய்ப்புத்துறை தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

புதிதாக பதிவு செய்து கொள்ள விரும்புவோர் தங்களது கல்வித் தகுதி, பிறப்பு, ஜாதிச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்

இணையதள முகவரி : www.tnvelaivaaippu.gov.in

வேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியிடு :  TJD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தஞ்சாவூர் 

ஆன்லைனில் பதிவு செய்யும் முறை :

1.  ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ?

இணையதளத்திலுள்ள படிவத்தில் விவரங்களை நிரப்பி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து படிவத்தில் விண்ணப்பித்தவுடன் ஒரு தற்காலிக பயனாளி அடையாளம் மற்றும் ஏற்புச்சொல் வரும். தங்கள் விண்ணப்பத்தின் விவரங்கள் சரியானவை எனில் 7 நாட்களுக்குள் விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கப்படும். பதிவு அடையாள அட்டையே தாங்களே உருவாக்கி, தாங்களே அச்சிட்டு வெளியே எடுத்துக் கொள்ளலாம்.

2. கூடுதல் பதிவு செய்வது எப்படி ?

ஆன்லைன் கூடுதல் தகுதிகள் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். தங்கள் கோரிக்கையை வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்றபின் புதிய அடையாள அட்டையை எடுக்கலாம்.

3. ஆன்லைனில் புதுப்பிக்க இயலுமா ?

ஆம். ஆன்லைனில் புதுப்பிக்கலாம். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதிவான மாதத்திலும் தொடர்ந்து வரும் இரு மாதங்களுக்குள்ளும் புதுப்பிக்கலாம். வரையறுக்கப்பட்டுள்ள காலத்தே புதுப்பிக்காதவர்கள் 18 மாதச் சலுகையில் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்.

4. விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, மறுக்கப்பட்டதா ? என்பதை எப்படி அறிவது ?

தற்காலிகப் பதிவு எண்ணை "பயன்படுத்துவோர் அடையாளமாகவும்" (username), பிறந்த தேதியை, எற்புச் சொல்லாகவும் (password) பயன்படுத்தி, பதிவின் நிலையை அறியலாம்

5. ஆன்லைனில் முகவரி மாற்ற முடியுமா ?

ஆம். பதிவு செய்தவர்கள் தாங்களே முகவரியை மாற்றிக் கொள்ளலாம்

6. ஆன்லைனில் முன்னுரிமைச் சான்றினை (priority certificate) பதிய இயலுமா ?  

முன்னுரிமைச் சான்றுகள், எடுத்துக்காட்டாக, நில எடுப்பு பாதிப்புச்சான்று (land acquisition) போன்றவற்றில் மெய்த்தன்மை உறுதி செய்யப்படவேண்டும். எனவே, எவ்வகை முன்னுரிமைச் சான்றுகளையும் ஆன்லைனில் பதிய இயலாது. சான்றின் நகல்களை விண்ணப்பத்துடன் அஞ்சலில்/நேரில் வேலைவாய்ப்பகத்திற்கு அனுப்ப வேண்டும்.

7. இத்தளத்தில் பதிவு செய்ய தகுதியானவர் யார் ?

இத்தளத்தில் தமிழ்நாட்டில் வசித்து வருபவர் பதியலாம்.

8. இத்தளம் மூலம் பணி நாடுவோர்களுக்கு உள்ள வசதிகள் யாவை ?

நேரில் பதிவு, நேரில் பதிவு புதுப்பித்தல், தகுதிகள் அதிகப்படுத்தல், அனுப்பப்பட்ட பதிவுக்கான பதிவட்டை எடுத்தல், வேலைவாய்ப்பு விவரங்கள், பல்வேறு தகுதிகளுக்கான பரிந்துரை வரம்புகள் அளித்தல் ஆகியவை உள்ளன.




ரோல்மாடலாக இருந்து ஆசிரியர்கள் மாணவர்களை கவர வேண்டும்: புதிய ஆசிரியர்களுக்கு பெண் அதிகாரி விளக்கம்

டேய், டப்பாஸ் வேணாண்டா... முதல் பீரியடு பிளேடுடா தூக்கம் வரும்... கட் அடிச்சுருவோமா...? என்று வகுப்புக்கு மட்டம் போடும் மாணவர்கள். அவரு அடி பின்னிடுவாரு... பாடம் புரியாட்டும் பரவாயில்லை. தலையை ஆட்டி கிட்டாவது வகுப்பில் உட்காரு வோம்டா... என்று பயந்தே வகுப்பறையில் நேரத்தை போக்கும் மாணவர்கள்... படிக்கும் போது பாடம் புரிகிறதோ? இல்லையோ? ஒவ்வொரு ஆசிரியர்களின் நடை, உடை, பாவனைகளை வைத்து ஒவ்வொரு பட்டப் பெயர்கள் சூட்டுவதில் மாணவர்கள் கில்லாடிகள்.

சில சமயங்களில் தங்கள் பட்டப் பெயர்களை கேட்டு ஆசிரியர்களே அதிர்ந்து போவார்கள். இதுக, படிக்கவா வருது உருப்படாத ஜென்மங்கள்! என்று வெறுப்பில் திட்டி தீர்ப்பார்கள்.

கோடிகளுக்கு அதிபதியானாலும் தெருக்கோடியில் வயது முதிர்ந்து தள்ளாடி நடந்து வரும் ஆசிரியரை கண்டால் ஓடி சென்று சார், வணக்கம். நல்லா இருக்கீங்களா? என்று கேட்கும் முன்னாள் மாணவனை பார்த்ததும் அந்த ஆசிரியரின் பொக்கை வாய் சிரிப்பில் ஆயிரம் மத்தாப்புகளை பார்க்கலாமே. ஆயிரம் ஆஸ்கார் விருதை விட உயர்ந்த விருதாக கருதி அந்த ஆசிரியரின் கண்கள் ஆனந்த கண்ணீர் வடிக்குமே! இப்படிப்பட்ட காட்சிகள் இன்று மெல்ல மெல்ல மறைந்து வருகிறதே ஏன்?

ஆசிரியர்கள் மாணவர்கள் மனதிலும், மாணவர்கள் ஆசிரியர்கள் மனதிலும் இடம் பிடிக்காமல் போவதற்கு என்ன காரணம்? மாணவர்களை ஆசிரியர்கள் கவருவது எப்படி? சுவாராஸ்யமாக விளக்கினார் பெரியமேடு உதவி கல்வி அதிகாரி சாந்தி.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா வருகிற 13-ந் தேதி பணி நியமன ஆணைகள் வழங்குகிறார். அந்த ஆசிரியர்கள் விரும்பும் இடங்களை தேர்வு செய்வதற்கான கவுன்சிலிங் சேத்துப்பட்டு எம்.சி.சி. பள்ளியில் இன்று நடந்தது. 

கலந்தாய்வுக்கு வந்த புதிய ஆசிரியர்களை வகுப்பறையில் அமரவைத்து அதிகாரி சாந்தி நடத்திய கிளாசை சுவாரஸ்யமாக கேட்டு கொண்டிருந்தார்கள். லட்சக்கணக்கானவர்கள் தேர்வு எழுதியதில் சில ஆயிரம் பேர்தான் வெற்றி பெற்றார்கள். எனவே இவர்கள் திறமைசாலிகள் என்பதற்கு இதைவிட அத்தாட்சி தேவையில்லை. ஆனால் படிப்பில் மட்டும் திறமை இருந்தால் போதாது! சகலகலா வித்தகர்களாக திகழ வேண்டும். அப்படியானால்தான் மாறி வரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாணவர்களை தன் வசப்படுத்த முடியும் என்றார் சாந்தி. 

வேலை கிடைச்சாச்சு. இனி மாதம் தோறும் அரசாங்க சம்பளம்... என்ற எண்ணத்துக்கு அப்பாற்பட்டு புதிய ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் எப்படி பணி செய்ய வேண்டும் என்று விளக்கினார். நூறு சதவீத சந்தோசத்துடன் வேலையில் ஈடுபட வேண்டும். வீட்டுக்கு வீடு வாசல்படி மாதிரி ஒவ்வொருவருக்கும் வீட்டு பிரச்சினைகள் ஏதாவது இருக்கத்தான் செய்யும். அந்த பிரச்சினைகளை பள்ளிக்கு வரும்போது வெளியே விட்டுவிட வேண்டும்.

பள்ளிக்குள் செல்லும் போது சிரித்த முகத்தோடு, அழகாக ஆடை அணிந்து செல்ல வேண்டும். உங்கள் நடை உடை, பாவனைகள் மாணவர்களை ஈர்க்க வேண்டும். நீங்கள்தான் அவர்களுக்கு ரோல் மாடல். பள்ளிக்கு சென்றதும் செல்போனை தூங்க வைத்து விடுங்கள். மாணவர்கள் தூங்காமல் பாடம் படிக்கும் படி உற்சாகமாக பாடம் நடத்த வேண்டும். 

வகுப்பறைக்குள் சென்றதும் அன்றைய நாட்டு நடப்புகளை பற்றி சிறிது நேரம் மாணவர்களோடு கலந்துரையாடுங்கள். அதன் பிறகு பாடம் நடத்துங்கள். வெறும் புத்தகம் மட்டும் மாணவர்களை உருவாக்காது. நல்ல கருத்துக்கள், பழக்க வழக்கங்களை சொல்லி கொடுங்கள். ஒவ்வொரு மாணவர்களையும் துல்லியமாக கவனித்து அவர்களது நிறை, குறைகளை அறிந்து அதற்கு ஏற்ப அவர்களை தயார்படுத்துங்கள். உங்களோடு அவர்கள் ஒன்றி விடுவார்கள்.

நான் பள்ளியில் ஸ்கேலால் கை விரலில் வாங்கிய அடியால் தமிழ் எழுத்துக்களை முத்து முத்தாக எழுத கற்று கொண்டேன். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம் இருக்கும். அனுபவமே பாடம். அதை வைத்து ஒவ்வொரு மாணவரையும் அற்புதமானவர்களாக உருவாக்குங்கள் என்றார். அதிகாரி சாந்தியின் அனுபவம் மிகுந்த ஆழமான, யதார்த்தமான கருத்துகள் கேட்டவர்கள் அத்தனை பேரையும் நிச்சயமாக சிந்திக்க வைத்திருக்கும்.

நடைமுறையில் இதை கடைபிடித்தால்... வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை... போதையில் வகுப்புக்கு வந்த மாணவன்... பள்ளிக்கு செல்லாமல் திரையரங்குகள், மால்களுக்கு சென்று தடம்மாறும் மாணவர்கள் என்ற வேதனையான நிகழ்வுகள் அரங்கேறாது என்று உறுதியாக சொல்லலாம்.

திங்கள், 10 டிசம்பர், 2012

குழந்தைகளுக்கு அவர்களின் அந்தரங்க உறுப்புகளை பற்றிய‌ விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியம்!


குழந்தைகளுக்கு அவர்களின் அந்தரங்க உடல் உறுப்புகளை பற்றிய‌ விழிப்புணர்வை அவர்களுக்கு பெற்றோர்கள் ஏற்படுத்தி, பிறர் அவர் களை தொட முயலும்போது அந்த தொடுதலை சரியாக அடையாள ம் கண்டு, அது தவறான தொடுதலாக இருக்கும்பட்சத்தில் அவர்க ளே அந்த காம பிசாசுகளை கண்டித்து, எதிராக போராடவும் சொல் லிக் கொடுக்க‍ வேண்டும். 
இன்றைய காலக்கட்ட‍த்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மறைமுகமாகஅரங் கேறுவது அதிர்ச்சிகரமானது. சமூக த்தில் அதுபற்றிய விழிப்புணர்வு இல் லாமல் இருப்பது துக்ககரமானது. நான்கு பேரில் ஒரு சிறுமியும், ஆறு பேரில் ஒரு சிறுவனும் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார் கள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கி றது.
பாலியல் கொடுமைகளில் இருந்து உங்கள் குழந்தைகளை காக்கவும், இதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நவம்பர் 19-ந்தேதி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்கும் உலக நாளாக அனுசரிக்கப்படுகிறது. பா லியல் கொடுமைகளைத் தடுக்க நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும், குழந்தைக ளுக்கு கற்றுக்கொடுக்க வே ண்டிய விஷயங்களும் ஏராள ம் உள்ளன. நாம் அறிந்து கொ ள்ள வேண்டிய விஷயங்கள்:  
 
* இந்தியாவில் பாலியல் வன் முறைகளிலிருந்து பாதுகா க்கும் சட்ட ம் 2012-ல் இயற்ற ப்பட்டு நடைமுறைப்படுத்த தயாராகிக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் பாலியல் கொடுமை க்கு எதிராக பள்ளியில் பயிற்சி அளிக்கப்படுவதோடு, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியவை மற்றும் பாலியல் வன்முறைக்கு எதிராக செயல்படும் முறைகள்:
 
* உங்கள் குழந்தையோடு தனிமை யில் ஒருவர் அதிக நேரம் செலவி டும் தருணங்களை தவிர்ப்பது. குழந்தையின் மீது யாராவது அதிக விருப்பம் காட்டினால் உஷாராக இருப்பது.
 
* பாலியல் கொடுமை பற்றி குடும் பத்தினரிடமும், மற்றவரிடமும் பேச குழந்தைகள் தங்களை தயார் செய் து கொள்ள வேண்டும்.
 
*பாலியல்கொடுமை நடந்தால் அதை ரகசியமாக வைத்துக்கொள்ள க்கூடாது என பெற்றோர் குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டு ம்.ஏனென்றால் அதில் குழந்தையின் தவறு ஒன்றும் இல்லை. பாலியல் குற்றம் புரிபவ ரின் வலிமையான ஆயுதமே, குழந்தைக ளின் பயம், தயக்கம் ஆகியவைதான். என வே ரகசியம் உடைப்பதே குற்றத்தை தடுக் கும்.
 
* குழந்தையின் அந்தரங்க உடல் உறுப்புக ள் பற்றியும், பிரச்சினைக் குரிய தொடுதல் (Bad Touch), பிரச்சினைகளற்ற தொடுதல் (Good Touch) பற்றியும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
 
* விருப்பமில்லாதவர்களோடு குழந்தைகள் இருக்க வேண்டியதில் லை என்று அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.
 
* குழந்தைகளிடம் கடினமாக பெற்றோர் நட ந்து கொள்ளக்கூடாது. அன்பும், பாராட்டும் கிடைக்காத குழந்தையை பாலியல் குற்றம் புரிப வர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வர்.
 
* பள்ளிகளில் சிறு வயது முதலே குழந்தை களுக்கு பாலியல் கொடுமையை தடுக்கும் சுய பாதுகாப்பு செய்திக ளை வழங்கலாம். பாலியல் கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வுட ன் இருப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. குழந்தைகளை பாலி யல் வன்முறைக்கு எதிராக விழிப்படைய வைப்பதும் பெற்றோரின் கடமை.

புதிய சி.டி.எஸ். காசோலை என்றால் என்ன? அவற்றை பெறுவது எப்ப‍டி?


புதிய சி.டி.எஸ். காசோலை என்றால் என்ன? அவற்றை பெறுவது எப்ப‍டி?

வருகிற டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு பழைய காசோலைகள் செல் லாது. புதிய சி.டி.எஸ். காசோலைகள் மட்டும்தான் செல்லும் எனரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 
சி.டி.எஸ். காசோலை என்றால் என்ன? இதை ஏன் இப்போது கொண்டு வருகிறார்கள்? இந்த சி.டி.எஸ். காசோலையைப் பெறு வது எப்படி? என பலருக்கும் பல வித கேள்விகள் இருப்பதால் அந் த கேள்விக ளை கார்ப்பரேஷன் வங்கியின் சேவைப் பிரிவின் தலைமை மேலாளர் எஸ்.சீனி வாசனிடம் கேட்டோம். தெளிவாக எடுத்துச் சொன்னார் அவர்.
”தற்போதுள்ள நடைமுறைப்படி, காசோலைகளை சம்பந்தப்பட்டவங்கிக்கு அனுப்புவதற்குப் பதிலாக அதனுடைய இமேஜை ஸ்கேன்செய்து, நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா விற்கு வங்கிகள் அனுப்புகின்ற ன. அங்கிருந்து அந்தந்த வங்கி களுக்கு காசோலை களின் இமேஜ் அனுப்பப்படும். வங்கிக ள் அந்த இமேஜை சரிபார்த்து, எந்த பிரச்னையும் இல்லையெ ன்றால் வாடிக்கையாளரின் கணக்குக்குப் பணத்தை வரவு வைக்கும். ஏதாவது பிரச்னை என்றால் திரும்ப அனுப்பிவிடும்.  இந்த நடைமுறையைத்தான் கடந் த ஒரு வருடமாக வங்கிகள் பின்பற்றுகின்றன.
இப்படி செய்வதில் வங்கிகளுக்குப் பல சிக்கல். ஒவ்வொரு வங்கியின் காசோலையும் வித்தியாசமா க உள்ளது. தேதி, வாடிக்கையா ளரின் கணக்கு எண், வங்கியின் பெயர், அடையாளச் சின்னம் என ஒவ் வொன்றும் ஓர் இடத்தில் இருக்கும். இதனால், காசோலை களை சரி பார்க்க  காலதாமதம் ஆகிறது. இந்த காலதாமதத்தைத் தீர்க்கத்தான் சி.டி.எஸ். காசோ லைகளை நடை முறைப்படுத்த உள்ளது ரிசர்வ் வங்கி.
இந்த காசோலையில் தேதி, வாடிக்கையாளர் கணக்கு எண் எழுது வதற்கு தனி கட்டங்கள் இருக்கும். சி.டி.எஸ். காசோலைகளை கலர் ஜெராக்ஸ் எடுக்கும்போது சாம்பல் நிறத்தில் உள்ள கட்டத்தில் வாய் டு ( என்று இருக்கும். இதை வைத்து போலிகளை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம். வங்கிக ளில் காசோலைக ளின் இமேஜை ஸ்கேன் செய்யும் போதே போலிக ளைக் கண்டுபிடித்து விட லாம்.
 
புதிய சி.டி.எஸ். காசோலை கள் பெறும் வழிமுறைகள் சுலபமான வைதான். ஏற்கெ னவே உள்ள காசோலைக ளை வங்கிக் கிளை களில் ஒப்படைத்துவிட்டு, புதிய காசோலைகளை பெற்றுக் கொள் ளலாம். ஆன்லைனி லும்  விண்ணப்பித்து பெற லாம்.
 
ஏற்கெனவே முன்தேதி இட்ட காசோலைகளை யாருக்காவது தந்திருந்தீர்கள் என்றால் அவற்றைத் திரும்ப வாங்கி, அவர்களுக்குப் புதிய சி.டி.எஸ். காசோலைகளை வழங்குவது உங்களின் பொறுப்பு. கடந்த மாதம் நீங்கள் புதிய கா சோலை வாங்கி இருந்தால் அது பெரும்பாலும் சி.டி.எஸ். காசோ லையாகவே இருக்கும்.  
 
சி.டி.எஸ். காசோலைகள் நடைமு றைக்கு வருவதன் மூலம் குறுகிய நேரத்தில் வாடிக்கையாளர்கள் பணத்தைப் பெறமுடியும். வெளியூர் காசோலைகளுக்கு தனிக் கட்ட ணம் எதுவுமில்லை. இதெல்லாம் வாடிக்கையாள ருக்குச் சாதகமா ன விஷயங்கள்.
 
அதே சமயம், முன்பெல்லாம் காசோலையில் எழு தும்போது தவறு ஏற்பட்டால் அதை அடித்துத் திருத் தலாம். ஆனால், இனி அடித்து எழுதும் காசோலை களை வங்கி ஏற்காது”

திங்கள், 15 அக்டோபர், 2012

கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய இணையதளங்கள்

            நாம் தினமும் இணையத்தில் பல தளங்களை பார்க்கின்றோம் . சில பிடிக்கலாம் , சில பிடிக்காமல் போகலாம் . ஆனால் அவசர உதவிக்கு சில தளங்களை நாம் பார்க்க வேண்டி இருக்கும் . சரியான முகவரி தெரியாததால் தேடு பொறிகளில் தேடி எடுப்போம் . அப்படி அடிகடி தேவை படும் சில இணையதளங்கள் தொகுத்து அளிக்கின்றேன் ..


கிரிக்கெட் :

















வாழ்த்து அட்டைகள் அனுப்ப ...


















வேலை வாய்ப்பு தகவல் தளங்கள்


























இசை பிரியர்களுக்காக ..