சந்தேகமே இல்லாமல் , ஒரு மாபெரும் பொக்கிஷம் உங்கள் கைகளில் தவழவிட , அந்த அன்னை எனக்கு அருள் பாலித்து இருப்பதாகவே , நம்புகிறேன்.
நவராத்திரி தொடங்க இருக்கும் மகத்தான வேளையில், இந்த புத்தகம் நமக்கு கிடைத்து இருப்பது - தெய்வாதீனம் என்றே நம்புகிறேன்.
முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்க, நம்மில் எத்தனை பேர் மனமார வேண்டினோமோ தெரியாது... நம் வாசகர்களில் யாரோ ஒருவர், முழு நம்பிக்கையுடன் வேண்டி இருந்தால் கூட, அந்த ஒரே ஒருவருக்காக கூட , இந்த புத்தகம் நமக்கு கிடைத்து இருக்கலாம்.
முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்க, நம்மில் எத்தனை பேர் மனமார வேண்டினோமோ தெரியாது... நம் வாசகர்களில் யாரோ ஒருவர், முழு நம்பிக்கையுடன் வேண்டி இருந்தால் கூட, அந்த ஒரே ஒருவருக்காக கூட , இந்த புத்தகம் நமக்கு கிடைத்து இருக்கலாம்.
நமது வேண்டுகோளை ஏற்று , நமது வாசகர்களுக்காக - இதை அனுப்பிவைத்த , திரு. வெங்கட் ராமன் அவர்களுக்கு, எங்கள் குழுவின் சார்பாகவும், நமது வாசகர்கள் சார்பாகவும், மனமார்ந்த நன்றி. இறைவன், உங்களை மகிழ்ச்சியிலும், நிம்மதியிலும் தொடர்ந்து வைத்து இருக்க , இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இந்த வராஹி மாலையை , மனமுவந்து பாராயணம் செய்து வந்தால் , உங்களுக்கு வராஹி தரிசனம் கண்டிப்பாக கிடைக்கும்.
முறைப்படி , எப்படி வழிபாடு செய்வது , என்ன என்ன செய்ய வேண்டும் - என்று எண்ணி மலைத்துக்கொண்டு இருக்க வேண்டாம். நமது முந்தைய கட்டுரைகளை படியுங்கள். உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ, அந்த வழியில் பூஜையை தொடங்குங்கள்... !
நீங்கள் ஆரம்பித்தாலே போதும், உங்களுக்கு தேவையான தகவல்கள் - மிக சரியான நேரத்தில் , உங்களை வந்தடையும்.
வாசகர்கள் , உங்கள் அனுபவத்தை , நீங்கள் விரும்பினால் - என்னிடம் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் அனுமதியுடன், வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வோம்..!
ஓகே,... ஓகே... உங்கள் பொறுமை எல்லை கடப்பதற்குள் நான் விடை பெறுகிறேன்..!
நம் ஒவ்வொருவருக்கும், அந்த வராஹி மனம் இரங்கி அருள் புரியட்டும் !
Read more: http://www.livingextra.com/2011/09/blog-post_27.html#ixzz2lfV3h865
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக