திங்கள், 10 டிசம்பர், 2012

குழந்தைகளுக்கு அவர்களின் அந்தரங்க உறுப்புகளை பற்றிய‌ விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியம்!


குழந்தைகளுக்கு அவர்களின் அந்தரங்க உடல் உறுப்புகளை பற்றிய‌ விழிப்புணர்வை அவர்களுக்கு பெற்றோர்கள் ஏற்படுத்தி, பிறர் அவர் களை தொட முயலும்போது அந்த தொடுதலை சரியாக அடையாள ம் கண்டு, அது தவறான தொடுதலாக இருக்கும்பட்சத்தில் அவர்க ளே அந்த காம பிசாசுகளை கண்டித்து, எதிராக போராடவும் சொல் லிக் கொடுக்க‍ வேண்டும். 
இன்றைய காலக்கட்ட‍த்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மறைமுகமாகஅரங் கேறுவது அதிர்ச்சிகரமானது. சமூக த்தில் அதுபற்றிய விழிப்புணர்வு இல் லாமல் இருப்பது துக்ககரமானது. நான்கு பேரில் ஒரு சிறுமியும், ஆறு பேரில் ஒரு சிறுவனும் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார் கள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கி றது.
பாலியல் கொடுமைகளில் இருந்து உங்கள் குழந்தைகளை காக்கவும், இதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நவம்பர் 19-ந்தேதி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்கும் உலக நாளாக அனுசரிக்கப்படுகிறது. பா லியல் கொடுமைகளைத் தடுக்க நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும், குழந்தைக ளுக்கு கற்றுக்கொடுக்க வே ண்டிய விஷயங்களும் ஏராள ம் உள்ளன. நாம் அறிந்து கொ ள்ள வேண்டிய விஷயங்கள்:  
 
* இந்தியாவில் பாலியல் வன் முறைகளிலிருந்து பாதுகா க்கும் சட்ட ம் 2012-ல் இயற்ற ப்பட்டு நடைமுறைப்படுத்த தயாராகிக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் பாலியல் கொடுமை க்கு எதிராக பள்ளியில் பயிற்சி அளிக்கப்படுவதோடு, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியவை மற்றும் பாலியல் வன்முறைக்கு எதிராக செயல்படும் முறைகள்:
 
* உங்கள் குழந்தையோடு தனிமை யில் ஒருவர் அதிக நேரம் செலவி டும் தருணங்களை தவிர்ப்பது. குழந்தையின் மீது யாராவது அதிக விருப்பம் காட்டினால் உஷாராக இருப்பது.
 
* பாலியல் கொடுமை பற்றி குடும் பத்தினரிடமும், மற்றவரிடமும் பேச குழந்தைகள் தங்களை தயார் செய் து கொள்ள வேண்டும்.
 
*பாலியல்கொடுமை நடந்தால் அதை ரகசியமாக வைத்துக்கொள்ள க்கூடாது என பெற்றோர் குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டு ம்.ஏனென்றால் அதில் குழந்தையின் தவறு ஒன்றும் இல்லை. பாலியல் குற்றம் புரிபவ ரின் வலிமையான ஆயுதமே, குழந்தைக ளின் பயம், தயக்கம் ஆகியவைதான். என வே ரகசியம் உடைப்பதே குற்றத்தை தடுக் கும்.
 
* குழந்தையின் அந்தரங்க உடல் உறுப்புக ள் பற்றியும், பிரச்சினைக் குரிய தொடுதல் (Bad Touch), பிரச்சினைகளற்ற தொடுதல் (Good Touch) பற்றியும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
 
* விருப்பமில்லாதவர்களோடு குழந்தைகள் இருக்க வேண்டியதில் லை என்று அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.
 
* குழந்தைகளிடம் கடினமாக பெற்றோர் நட ந்து கொள்ளக்கூடாது. அன்பும், பாராட்டும் கிடைக்காத குழந்தையை பாலியல் குற்றம் புரிப வர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வர்.
 
* பள்ளிகளில் சிறு வயது முதலே குழந்தை களுக்கு பாலியல் கொடுமையை தடுக்கும் சுய பாதுகாப்பு செய்திக ளை வழங்கலாம். பாலியல் கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வுட ன் இருப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. குழந்தைகளை பாலி யல் வன்முறைக்கு எதிராக விழிப்படைய வைப்பதும் பெற்றோரின் கடமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக