வியாழன், 31 ஜனவரி, 2013

செயல்வழிக் கற்றல் வேண்டாம்


Dinamani

First Published : 20 September 2009 05:34 AM IST
 சேலம், செப். 19: தமிழக பள்ளிகளில் நடைமுறையில் இருந்து வரும் செயல்வழிக் கற்றல் முறைக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 இக் கூட்டணியின் சேலம் மண்டல கோரிக்கை மாநாடு சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் க.சந்திரசேகர் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் இரா.சுப்பிரமணியன், நாமக்கல் க.நடராஜன், தருமபுரி இரா.பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்டச் செயலர் ம.பூபதி வரவேற்றார். அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தென்னிந்தியச் செயலர் வா.அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழக ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
 பதவி உயர்வுக்கு இதுவரை நடைமுறையில் வழங்கி வந்ததைப் போல் 5 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வழங்குவது போல் முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
 ஆசிரியைகளுக்கு மகப்பேறு விடுமுறையை 6 மாதங்களாக உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்.
 செயல்வழிக் கற்றல் முறையால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. எனவே இந்த முறையை கைவிட்டு விட்டு, பாடநூல் வழி கற்றல் முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக